ஞாயிறு, 27 மார்ச், 2011

சர்வதேச ஓசோன் தினம்


"சூழலை பாதுகாப்போம்" என்ற தொனிப்பொருளில் இன்றைய ஓசோன் பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது.1985 ம் ஆண்டு ஓசோன் கண்டறியப்பட்டது. ஒசோனால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இருப்பதாக அப்போது கூறப்பட்டது.அதன் பின்னர் 11 ஆண்டுகளின் ஆராய்ச்சியின் அடிப்படையிலே ஓசோன் பற்றிய முழு விபரமும் நமக்கு அளிக்கப்பட்டது.

1987ல் கனடாவில் உள்ள மொன்ட்ரியலில் ஐ.நா.,வின் ஒப்பந்தம் ஓசோன் பாதுகாப்புக்கு முயற்சி எடுத்தது. ஒவ்வொரு நாடும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல், ஓசோனில் பாதிப்பு ஏற்படுத்தும் பொருட்களை வெளியிடக்கூடாது என்று அந்த ஒப்பந்தம் நாடுகளை கட்டுப்படுத்தியது.
தரையிலிருந்து 15கி.மீ. உயரம் வரைதான் காற்று மண்டலம் இருக்கிறது. நமது உலகில் நிகழும் மழை, பனி, புயல் எல்லாம் இதற்குள் அடங்கிவிடும். இதற்கு அப்பால் வானில் காற்று மிக மிகக் குறைவு. 30 கி.மீ. தூரத்தில் ஓசோன் வாயு ஒரு மெல்லிய புகைப் படலம் போல் பரவி இருக்கிறது.அடர்த்தி குறைந்த வாயு ஓசோன்.

சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களை பூமிக்கு வராது தடுத்து தெறிப்படையச் செய்வதனால் புற ஊதாக்கதிர்களிலிருந்து நமது சருமத்தை பாதுகாப்பதுடன் தோல் புற்றுநோய் போன்ற நோய்களிலிருந்தும் பாதுகாக்கின்றது.தாவர விலங்கினங்களில் மரபணு சிதைவு, துருவங்களில் பனிக்கட்டிகள் உருகி கடல்மட்டம் உயர்தல், பயிர் மகசூல் வீழ்ச்சி ஆகியன ஓசோன் மண்டலத்தின் ஓட்டையால் ஏற்படுகின்றன.

ஏன் ஒசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்படுகின்றது?நாம் அன்றாடம் பாவிக்கும் பிளாஸ்ரிக் பொருட்களை எரிப்பதனால் அதிலிருந்து வெளியேளிறும் புகை ஒசோன் மண்டலத்தில் ஒரு படையாக படிந்து தாக்கம் புரிகின்றது.இதனால் ஒசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்படுகின்றது.மற்றும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் குளிர்சாதனப்பெட்டி,குளிரூட்டி என்பவற்றில் இருந்து வெளியேறும் குளோரோபுளோரோ காபன் கூட ஒசோன் படையை பாதிக்கின்றது.

இவ்வாறு பாதிக்கப்பட்டு வரும் ஒசோன் படையை பாதுகாப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16ல் ஓசோன் பாதுகாப்பு தினம் கடைபிடிக்க வேண்டும் என்று 1994ல் ஐ.நா., முடிவு செய்தது.ஒவ்வொரு நாடும் தங்கள் நாடுகளின் மேல்புறத்தில் உள்ள ஓசோன் படலத்துக்கு தீங்கு விளைவிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஓசோன் படலத்தை சிதைக்கும் காரணிகளை ஒவ்வொரு நாடும் குறைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு தற்போது அதில் 90 சதவீதம் வெற்றி பெறும் நிலையிலும் இருக்கிறோம். எனினும் இதில் 100 சதவீதம் வெற்றி பெற முடியுமா?என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

பூமியில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒசோன் படையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.என்வே நம்மால் முடிந்தளவிற்கு பொலுத்தின் கவர்களிற்கு பதிலாக காகித பையை பயன் படுத்தலாம்.பொலுத்தீன் பைகளை மீள் பாவனைக்கு உட்படுத்தலாம்.முடிந்தளவிற்கு எரிக்காமல் இருக்கவேண்டும்.மேலும்,குளோரோபுளோரோகாபன் இல்லாத பொருட்களை பயன்படுத்தவேண்டும்.இவ்வாறான எமது முயற்சிகளின் மூலம் நாம் ஒசோனை பாதுகாப்போம் என்று இவ் நாளிலே சபதம் எடுக்கவேண்டும்.ஏனென்றால் நாம் தான் நாளைய சமுதாயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக