செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

அன்பே



"அன்பே................." 

எண்ணங்களின் எதிர்காலம் 
எங்கே கொண்டுபோனாலும் 
உன்னிடத்தில் தான் வருவேன்............. 

உன் மடியில் வீழ்ந்து 
உன் மூச்சை உணர்ந்து 
உன்னில் கரைந்து 
உன்னுடனே.., 

நீயாகவே மாறி 
என்னை இழந்து 
இணைய வேண்டும்............ 

அதுவரை, 
நீ அங்கேயே இரு 
நான் உன் நினைவுகளோடு 
இங்கேயே.................

பிறந்த நாள் வாழ்த்துக்கள்..


 

கண்ணில் காண்பதெல்லாம் நனவென்று நம்பாதே... 
காணாத கனவுகளும் நனவாகிப் போகலாம்... 
நிகழ்கால நிழலில் மட்டும் ஓய்வெடுக்க எண்ணாதே... 
எதிர்கால மர நிழலில், இறந்த காலத் தென்றல் காற்றின் இதமான அரவணைப்பில் சுகமாக ஓய்வெடு... 

கண்களை மூடித் திறக்குமுன், உன் கற்பனையைத் திறந்துவிடு.. 

பூக்களின் வாசனையை நுகர்வது தவறல்ல...அதிலுள்ள முட்களின் வேதனையையும் புரிந்துகொள்.. 
புன்னகையே வாழ்க்கையல்ல..பூகம்பமும் வரும்; புரிந்துகொள்... 

நீ விதைத்ததை நீயே அறுவடை செய்வாய்; 
அன்று கொள்ளாவிடினும் நின்றாவது கொள்ளும்.. 
மாற்றான் துயரம் மற்றுமல்ல; மதுவும்; ஏன் மாதுவும் கூட... 

மற்றவன் கண்களில் தெரிவது கண்ணீரென்று மட்டும் எண்ணாதே, 
அது விஷமாகவோ; கேலியாகவோ; ஏன் உனக்கெனவே செய்த புதை குளியாகவும் இருக்கலாம்.... 
இது "நீ".. 
உனக்கென ஒரு பாதை.. 
உனக்கென ஒரு பயணம்.. 
உன்னோடு சில பயணிகள்.. 
தேர்வு உன் கையில்... 

இது நீ "பிறந்த நாள்" அல்ல.. 
உன்னை நன்கு ஒரு முறை "உணர்ந்த நாள்" ஆயின்... 
உன்னை எண்ணிப் பூரிப்பாதில் நானும் ஒருவன் 

பல்லாண்டு காலம் வாழ்க... 
பிறந்த நாள் வாழ்த்துக்கள்..


புதன், 17 ஆகஸ்ட், 2011

லீ குவான் யூ



லீ குவான் யூ
லீ குவான் யூ (பிறப்பு செப் 16 , 1923), சிங்கப்பூர் குடியரசின் முதல் பிரதமர் (1959 - 1990) ஆவார்.
 இவர் சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சியின் (PAP) நிறுவனர்களுள் ஒருவரும் ஆவார். பிரதமர்
 பதவியிலிருந்து விலகிய பின்னரும் ஒரு முதுநிலை அமைச்சராகப் பணியாற்றினார்.
சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமரான லீ சியன் லூங், இவரின் மகன் ஆவார். பிரதமர் ஆட்சியில்
 இருந்து இறங்கிய பின்னரும் சிங்கப்பூரின் மிக முக்கியமான அரசியல்வாதியாக இருக்கிறார்.
 சிங்கப்பூரின் இரண்டாவது மந்திரியின் (கோ சோக் தோங்கு) கீழ் (senior minister) ஆக
 பணியாற்றினார். இப்பொழுது இவருக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு முக்கிய பதவி
 (Minister Mentor) வகித்து வருகிறார்.

[தொகு]குடும்பம்

லீ குவான் யூ, அவரின் வாழ்க்கை வரலாற்றில் தான் நான்காவது generation சீனத்தவர் என்று 
குறிப்பிட்டுள்ளார். அவரின் மூதோதயார் லீ போக் பூன், 1846ஆம் ஆண்டு சீனாவில் உள்ள 
குவாங்தொங் மாகாணத்தில் இருந்து வெளியேறி சிங்கப்பூரின் Strait settlements க்கு வந்ததாக
 கூறி உள்ளார்.