புதன், 11 மே, 2011

சிங்கப்பூர் வரலாறு - சிங்கபுரம்



 சிங்கை           
           

எப்போதும் வரலாறுகள் தேவையற்றவை என்பது புதிய தலைமுறையின் வாதமாக இருந்து வந்துள்ளது. ஆனால் முன்னேற்றப் பாதையில் இருந்து பின் நலிந்திவிட்ட ஒரு சமுதாயத்துக்கு வரலாறுகளே மீண்டும் அடியெடுத்துக் கொடுத்து புதிய வரலாறு படைக்க உதவுகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. ஏதோ தேவையற்று பின் நோக்கி சென்று நமதி சிந்தைகளை நிலை குத்த வைப்பது போல் இந்த வரலாறு தோன்றினாலும் பின் நோக்கி உங்களை - உங்கள் வரலாற்றை புரிந்துக் கொள்ள அறிவு கிடைக்கிறது.   


   
சிங்கப்பூரின் பண்டைக் காலம் பற்றி எழுத்து வடிவப்பதிவுகள் கோர்வையாக இல்லை,அங்கொன்றும் இங்கு கொன்றுமாகச் சில தகவல்கள் கிடைத்துள்ளன.இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரம் சிங்கபுரம் என்ற ஒரு நகரைக் குறிப்பிடுகிறது.


 இவ்வாட்டாரத்தில் முதல் வரலாற்று ஆவணமாக விளங்கும் நகரகிரேத்தாகமா எனும் ஜாவானிய நூல் 1365-ம் ஆண்டில் எழுதபட்டது. இது தெமாசெக் எனும் குடியேற்றப் பகுதியைப் பற்றி குறிப்பிடுகிறது. சி.எம். டர்ன்புல் என்பார் தமது நூலில் (சிங்கப்பூர் வரலாறு 1819-1975). பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட செஜாரா மலாயு எனும் மலாட் மரபு வரலாற்று நூல் மட்டுமே தெமாசெக் சிங்கப்பூராவின் முழுமையான வரலாற்றைத் தருவதாகத் தெரிகிறது என்கிறார்.

இவ்வரலாற்று நூலின்படி இராஜ ராஜ சோழன் என்னும் இந்திய மன்னர் பதினோராம் நூற்றாண்டில் தமது  படையெடுப்புகளில் ஒன்றின் போது தெமாசெக்கில் தங்கியிருந்தாகத் தெரிகிறது. இச் சோழ ராஜனின் மகன், சாங் நீல உத்தமன். ஸ்ரீ விஜய எனும் பேரரசின் மையமாக விளங்கிய பலம்பாங் எனும் நாட்டின் அரசன் ஆனான் என்றும், ஸ்ரீ திரிபுவன எனும் பெயரை அவன் சூட்டிகொண்டான் என்றும் இந்த மரபு வரலாறு தெரிவிக்கிறது. இவ்வட்டாரத்தில் உத்தமன் மேற்கொண்ட பயணங்களின் போது தெமாசெக்கில் தரை இறங்கியதாகக் கூறப்படுகிறது. அவரின் ஆட்சியின்போதும், அவரைத் தொடர்ந்த நான்கு அரசர்களின் ஆட்சியின் போது சிங்கப்பூரா செழித்தோங்கியது. அதனால் பொறாமையுற்ற மஜபாகிட் எனும் ஜாவா பேரரசு இத்தீவைச் சூறையாடியது. தப்பியோடிய அரசர் மலாக்காவில் புதிய ஆட்சியை நிறுவினார்.

சற்றேறக்குறைய 1390-ம் ஆண்டில் பரமேஸ்வரா என்னும் இளவரசர் பலம்பாங் நாட்டின் சிங்காசனம் ஏறினான். பலம்பாங்கை மீண்டும் பேரரசாக விளங்கச் செய்யவேண்டும் என்பது அவரின் பேராவல்.தன் எண்ணம் நிறைவேறுவதற்கு முன்னரே அங்கிருந்து துரத்தப்பட்ட அவர், சிங்கப்பூரில் தன் பரிவாரம் புடை சூழத் தங்கினான். ஆனால்,மஜபாகிட் பேரரசு அவரை விடவில்லை.சிங்கப்பூரிலிருந்தும் அவரைத் துரத்தியது. பரமேஸ்வரனுக்கும் பின் சிங்கப்பூர் ஆள் அரவற்ற இடமாக மாறவில்லை.

சிங்கப்பூர் சயாமிய பேரரசுக்குக் கப்பம் கட்டும் நாடாக விளங்கியது.ஆனால் பரமேஸ்வரா தோற்றுவித்த மலாக்கா அரசு விரைவில் சிங்கப்பூர் வரை தனது அதிகாரத்தைத் செலுத்தத் தொடங்கியது. இருப்பினும் போர்த்துகீசியர்கள் மலாக்கா நகரை 1511 கைப்பற்றியபோது அவ்வரசின் கடற்படைத் தளபதி லட்சுமணா சிங்கப்பூருக்கு ஓடிவந்தார். சுல்தான் ஜோகூர் லாமாவின் (பழைய ஜோகூர்) தம் புதிய தலை நகரத்தை அமைத்துக் கொண்டதோடு, சிங்கப்பூரில் துறைமுக அலுவலகம் ஒன்றையும் நடத்தி வந்தார்.
 


போர்த்துகீசியர்கள் 1587-ம் ஆண்டில் ஜோகூர் லாமாவை அழித்துவிட்டனர். ஜோகூர் அரசின் தலைமையகம் .ரியாவ்-லிங்காத் தீவுக் கூட்டத்தில் மீண்டும் அமைக்கப்பட்டது. சுல்தானின் மூத்த அமைச்சரான தெமொகோங்கின் அதிகாரத்தில் சிங்கப்பூர் இருந்தது. கடலை நம்பி வாழ்பவர்களும், சிறிய கூட்டமாகச் சில உள்நாட்டு மக்களும் வாழ்ந்து வந்தனர்.

1819 -ஆம் ஆண்டில் பிரிட்டிஸ் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாக அதிகாரியாக சர் ஸ்டாம் போர்டு ராபிள்ஸ் என்பார் சிங்கப்பூருக்கு வந்தார். ஆறு கடலோடு கலக்கும் இடமாகவும், மீன் பிடித் தீவாக இருந்த இத்தீவு கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கிழக்காசியாவில் நடுநாயகமாக விளங்கச் சிங்கப்பூர் சிறந்த இடம் என அவர் எண்ணினார், அப்போதைய சிங்கப்பூரின் உரிமையாளராக விளங்கிய ஜோகூர் சுல்தானுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு கிழக்கிந்தியக் கம்பெனியின் வணிகத்தளமாகச் சிங்கப்பூரை மாற்றினார் ராபிஸ்.அப்போது சிங்கப்பூர் காடு மண்டிய ஒரு தீவாக இருந்தது. காட்டை அழித்து வணிக நிலையமாக்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டார் ராபிள்ஸ்.

1959-ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயர் சிங்கப்பூரைத் தம் ஆளுகையின் கீழ் வைத்திருந்தார்.140 ஆண்டுகள் ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டிருந்த சிங்கை 1959 இல் தன்னாட்சி உரிமை பெற்ற தனிநாடாகியது.

முதல் தேர்தல் 1959 -ஆம் நடைப்பெற்றது. அதில் மக்கள் செயல் கட்சி வெற்றிப் பெற்று திரு. லீ குவான் இயூ பிரதமராகி சிங்கப்பூரை வழி நடத்தினார்.

1963 -இல் சிங்கப்பூர் அன்றைய "மலாயா" வுடன் இணைந்தது.சிங்கப்பூர்,மலாயா இணைந்த நாட்டை "மலேசியா" என அழைத்தார்கள்.ஆனால் இவ்விணைப்பு சுமார் ஒன்றரை ஆண்டுகளே நீடித்தது.கருத்து வேற்றுமையாலும், கொள்கை வேற்றுமையாலும் 9-8-1965 ஆம் நாள் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து ஒரு தனி நாடாகியது.  சிங்கப்பூர் தனிக் குடியரசு ஆகியது. அரசியல் தலைவர்களின் முன்னோக்குப் பார்வையால் சிங்கப்பூர் பல்வேறு மாற்றங்களைக் கண்டது. இயற்கைக் கனிவளங்கள் ஒன்றுமில்லா சின்னஞ்சிறு தீவு மக்கள் வளத்தை மட்டுமே நம்பியது. மலாயாவிலிருந்து பிரிந்த பின் பல்வேறு சமூக,அரசியல் பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டி இருந்தது. சின்னஞ்சிறு தீவான சிங்கப்பூரால் தனித்து ஒரு நாடாக இயங்கமுடியுமா என்ற ஐயப்பாடு மக்கள் மனதில் தோன்றின. அந்த ஐயப்பாட்டைக் களைய, சிங்கப்பூர் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை, செயல்பாடுகளை நிறைவேற்றியது.

சிங்கப்பூர் தனிக் குடியரசு ஆகியது. அரசியல் தலைவர்களின் முன்னோக்குப் பார்வையால் சிங்கப்பூர் பல்வேறு மாற்றங்களைக் கண்டது. இயற்கைக் கனிவளங்கள் ஒன்றுமில்லா சின்னஞ்சிறு தீவு மக்கள் வளத்தை மட்டுமே நம்பியது. மலாயாவிலிருந்து பிரிந்த பின் பல்வேறு சமூக,அரசியல் பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டி இருந்தது. சின்னஞ்சிறு தீவான சிங்கப்பூரால் தனித்து ஒரு நாடாக இயங்கமுடியுமா என்ற ஐயப்பாடு மக்கள் மனதில் தோன்றின. அந்த ஐயப்பாட்டைக் களைய, சிங்கப்பூர் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை, செயல்பாடுகளை நிறைவேற்றியது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், 1971- ஆம் ஆண்டு தூரகிழக்கில் தான் வைத்திருந்த இராணுவத்தை குறைக்கவே சுமார் 10,000 பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை இழந்தனர். சிங்கப்பூர் பாதுகாப்பிற்குத் தன்னை  நம்பவேண்டிய கட்டாய நிலையில், கட்டாய இராணுவ சேவையை ஆரம்பித்தது.

மேலும் குடியிருப்பு,சமூகப் பிரச்சனைகளில் நாடு உடனே சமாளிக்க வேண்டியதாயிற்று. இதனால் பொருளாதார  துறையில் நன்கு வளர்ச்சிக் கண்டது. இந்த வளர்ச்சி படிப்படியாக வளர்ந்து ஓர் உன்னத நிலையை அடைந்துள்ளது. 



1819 ஆம் ஆண்டு முதல் இந்தியா, சீனா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வந்த குடியேறிய மக்களின் அரிய உழைப்பால் சிங்கை, சிறுகச் சிறுக மாநகரமாக மாறத் தொடங்கியது. தாம் குடியேறி இடத்தில் தங்களுடைய  பண்பாடு,மொழி போன்றவற்றின் பாரம்பரியங்களைப் பல்வகை மக்களூம் பேணிக் காத்தனர்.  இதில் தமிழருடைய பங்கு சிறப்புகுரியது.

சிங்கப்பூரில் தமிழர்

 1880 - களிலிருந்து தமிழும், தமிழ் இலக்கியமும் தோன்றி வளரலாயிற்று. நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட வளர்ச்சியைச் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் பெற்றுள்ளது.1993-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக் கெடுப்பின்படி 2,873,000 மில்லியன் மக்கள் சிங்கப்பூரில் வாழ்கின்றனர். இதில் 77.5 விழுக்காட்டினர் சீனர்;  14.2 விழுக்காட்டினர் மலாய்க்காரர்; 7.1 விழுக்காட்டினர் இந்தியர்கள்; 1.2 விழுக்காட்டினர் பிற இனத்தவர்கள். இந்தியர்களுள் சுமார் 1 1/2 இலட்சம் தமிழர்களும் அடங்குவர்.

தமிழ்ப் பள்ளிகள்    

 தமிழகத்திலிருந்து வந்து குடியேறிய தமிழர்கள் தமிழின்பால் கொண்ட ஆர்வத்தால் பல தமிழ்ப்பள்ளிகளை  உருவாக்கத் தொடங்கினர்.தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் வளர்ப்பதற்குப் பெரும் முயற்சிகளைச் செய்துள்ளனர்.  "திருவள்ளுவர்", "வாசுகி", "அரவிந்தர்", "நாகம்மையார்", "சாரதா தேவி","கலைமகள்", "உமறுப் புலவர்" போன்ற பெயர்களில் இருபத்திரண்டுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகளை உருவாக்கினர்.


ஆலயங்கள்

வழிபாட்டின் திருவிடங்களாகத் திருக்கோயில்கள் திகழ்கின்றன். திரைகடலோடி திரவியம் தேடச் சென்ற தமிழர்கள், தங்கள் நாகரீகச் சின்னமாக விளங்கும் திருக்கோயில்களையும் சென்ற இடங்களில் எல்லாம் உருவாக்க மறந்தார்கள் இல்லை. தமிழர்கள் சென்ற இடங்களில் எல்லாம் தாங்கள் சீரும் சிறப்பாக வாழ்கிறார்களோ இல்லையே, திருக்கோயில்கள் சீரும் சிறப்பும் பெற்று திகழ்ந்தன். இருக்க இடம் உண்ண உணவு இல்லை என்றாலும் இறைவனுக்கு ஆலயம் எழுப்பி இன்பம் கண்டான்.

அழியும் உடலுக்குள் இருக்கும் அழியா ஒன்றுக்கு, ஆன்மா என்று கண்டான். அந்த ஆன்மா போகுமிடங்களில் மதிப்பளிக்கப் படவேண்டும் என்று இறைவழி பாட்டைத் துவங்கினர். இந்து சமயம் ஒரு ஆழ்கடல் போன்றது.
அதில் சேர்ந்துள்ள மொழிகளும், பண்பாடுகளும் புத்தம் புதிய கருத்துகளைக் கொண்டு சேர்த்தவை. அவற்றை எல்லாம் இயன்ற வரை ஆங்காங்கே புகுத்திய நிலையில் தான் கோயில்கள் தோன்றம் அளிக்கிறன்றன.

ஞாயிறு, 8 மே, 2011

நம்முடைய தினசரி வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ளும் விதத்தை இந்தக் கட்டுரை மாற்றிவிடும் .

அப்படி இந்தக் கொள்கையில் என்னதான் இருக்கிறது?
உங்களது வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களில் 10% இயற்கையாக நடப்பவை. மீதி 90% உங்களால் நிச்சயிக்கப்படுபவை.
எப்படி?
மேற்கொண்டு படியுங்கள் .

உண்மையாகவே நமக்கு நடக்கும் சம்பவங்களில் 10% நம் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. உதாரணமாக:
ஓடிக்கொண்டிருக்கும் நம் வாகனம் திடீரெனப் பழுதாகி நின்றுவிடாமலிருக்க நம்மால் ஏதாவது செய்ய முடியுமா?
தாமதமாகச் சென்றடையும் விமானத்தாலும், ரயிலாலும், பேருந்தாலும் நம் பயணத்திட்டங்கள் அனைத்துமே சில நேரங்களில் தாறுமாறாகக் குழம்பி விடுகின்றன. அதற்கு நம்மால் ஏதாவது செய்ய முடியுமா ?
நாம் ஓட்டிச் செல்லும் வாகனத்தைச் சட்டத்தை மீறி முந்திச் செல்லுகிறார் மற்றொரு ஓட்டுனர். அதற்கு நம்மால் ஏதாவது செய்ய முடியுமா?
இந்த 10% இல் நமக்கு எந்த ஆளுமையும் கிடையாது . இதை மாற்ற நம்மால் எதுவும் செய்ய முடியாது . இது நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது.
மீதியிருக்கும் 90% முற்றிலும் மாறுபட்டது . அந்த 90% ஐ நாம்தான் தீர்மானிக்கிறோம்.

எப்படி?
நடக்கும் சம்பவத்தை நாம் எதிர்கொள்ளும் விதத்தில், அந்த மீதி 90% ஐ நாம்தான் தீர்மானிக்கிறோம் .
டிராபிக் சிக்னலின் சிவப்பு விளக்கை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அதனை எதிர் கொள்ளும் விதத்தை நம்மால் மாற்றியமைக்க இயலும்.
இதன் மூலம் நீங்கள் மற்றவர்களால் முட்டாளாக்கப்படுவதைத் தவிர்த்து விடவும் முடியும்.
சம்பவங்களை எதிர்கொள்ளும் விதத்தை நம்மால் தீர்மானிக்க முடியும்; கட்டுப்படுத்த முடியும்.

இதோ ஓர் உதாரணம்:
காலைச் சிற்றுண்டியைக் குடும்பத்தினருடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
உங்கள் அருமை மகள் தேனீர்க் கோப்பையைத் தவறுதலாகத் தட்டிவிட, அதிலிருந்த தேனீர் உங்கள் மீது கொட்ட, அலுவலகம் செல்ல அணிந்திருந்த உங்களது சட்டை பாழ். நடந்த இந்தச் சம்பவத்தின் மீது உங்களுக்கு எந்த ஆளுமையும் இல்லை. இப்படி நடக்காமலிருக்க உங்களால் எதுவும் செய்திருக்க முடியாது. ஆனால் அடுத்து நடக்கப் போவது என்ன என்பதனைத் தீர்மானிக்கப் போவது, இதனை எதிர் கொள்ள நீங்கள் எடுக்கப் போகும் முடிவுதான்.
நீங்கள் சபிப்பீர்கள். தேனீர் கோப்பையைத் தட்டிவிட்டதற்காக அருமை மகளைக் கடுமையாகத் திட்டித் தீர்ப்பீர்கள்/ கண்டிப்பீர்கள்...
மகள் அழத் தொடங்குவாள்....அடுத்ததாக, தேனீக் கோப்பையை மேஜையின் ஓரத்தில் வைத்ததற்காக உங்கள் கோபம் மனைவி மீது திரும்பும் .
அதனைத் தொடர்ந்து மனவியுடன் ஒரு சிறிய வாய்ச் சண்டை. கோபத்தோடு மாடிக்குச் சென்று வேறு சட்டையை அணிந்து வருகிறீர்கள்.

மாடியிலிருந்து கீழே வந்ததும் நீங்கள் காணும் காட்சி:
உங்கள் அருமை மகள் அழுது கொண்டே சிற்றுண்டியை முடித்து, பள்ளி செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறாள். சற்று முன்னர் நடந்த நிகழ்வுகளால் ஏற்பட்ட தாமதம் காரணமாகப் பள்ளிப் பேருந்தைத் தவறவிட்டு விடுகிறாள் உங்கள் மகள் . மனைவியும் உடனடியாக அவருடைய அலுவலகத்திற்குப் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார். இன்று மகளைப் பள்ளியில் கொண்டு சேர்க்கும் பொறுப்பு உங்கள் தலையில். காரில் மகளை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு விரைகிறீர்கள். மகளைப் பள்ளியில் கொண்டு சேர்த்த பின்னர்தான் நீங்கள் உங்கள் அலுவலகத்திற்குச் செல்ல முடியும் .
அலுவலகத்திற்குத் தாமதமாகி விட்டதால் சாலையின் வேக விதியை மீறி விரைவாகச் செல்கிறீர்கள்.
பதினைந்து நிமிட தாமதம்; அதற்கும் மேல் சாலையின் வேக விதியை மீறியதற்காக ரூபாய் 300 அபராதம் .
அப்பாடா என்று மகளைப் பள்ளியில் இறக்கிவிட, " போய் வருகிறேன்" என்று கூடச் சொல்லாமல் அவள் பள்ளி வளாகத்திற்குள் ஓடிவிட்டாள் . அதிலொரு சிறிய மனச்சஞ்சலம் உங்களுக்கு .

இருபது நிமிட தாமதத்திற்குப் பின் அலுவலகத்தில் அடியெடுத்து வைக்கும் போதுதான் நினைவு வருகிறது, " ஆகா! அலுவலகக் கோப்புகள் அடங்கிய பிரீஃப்கேஸை அவசரத்தில் எடுத்து வர மறந்து விட்டோமே " என்று. உங்களின் அன்றைய தினத்தின் தொடக்கமே சற்றுக் கடுமையானதாகிவிட்டது. மேலும் அது அவ்வாறே தொடர்கிறது. எப்போது வீடு சென்றடைவோம் என்ற எண்ணம் மேலோங்குகிறது .
மாலையில் வீடு வந்தடைந்தவுடன் மனைவி, மகளின் நெருக்கத்தில் சற்று விரிசலை உணர்கிறீர்கள்.

ஏன்?

காரணம், காலையில் நீங்கள் நடந்து கொண்ட விதம்தான்.
இந்த நாள் இப்படி இனிமையில்லாத நாளானதன் காரணம்தான் என்ன?
அ) அந்த ஒரு கோப்பைத் தேனீரா ?
ஆ) தங்களின் அருமை மகளா?
இ) அபராதம் விதித்த அந்தப் போக்குவரத்துக் காவலரா?
ஈ) நீங்கள்தான் காரணமா ?

சரியான விடை: " ஈ". ஆமாம் நீங்களேதான் ஐயா !

அந்தத் தேனீர் சிந்தியதற்கு நீங்கள் எந்த விதத்திலும் பொறுப்பாளி அல்ல. அது உங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது. ஆனால் தேனீர் சிந்திய அடுத்த ஐந்து வினாடிகளில் நீங்கள் நடந்து கொண்ட விதம்தான் எல்லாவற்றிற்கும் மூல காரணம் . நீங்கள் எப்படி நடந்து கொண்டிருக்க வேண்டும் ?
இதோ இப்படி:
தேனீர் உங்கள் மீது கொட்டுகிறது.
அருமை மகள் அழப் போகிறாள்.
நீங்கள் மிக அன்பான குரலில், " பரவாயில்லை, அடுத்த முறை கவனமாக நடந்துகொள் அருமை மகளே !" என்று அவளைச் சமாதானப் படுத்துகிறீர்கள். உங்கள் மேல் சிந்திய தேனீரை முகம் கோணாமல் புன்முறுவலுடன் ஒரு டவலால் துடைத்தபடி மாடிக்கு விரைகிறீர்கள். மாடியிலிருந்து புதிய சட்டையையும் அலுவலகக் கோப்புகள் அடங்கிய பிரீப்கேஸையும் எடுத்துக் கொண்டு நிதானமாக இறங்கி வரும்போது ஜன்னல் வழியாகப் பார்க்கிறீர்கள் அங்கே, உங்களை நோக்கிக் கையசைத்து விடை பெற்றவாறே அருமை மகள் பள்ளிப் பேருந்தில் ஏறுவதைக் கண்டு மகிழ்கிறீர்கள் !

வழக்கத்தை விட ஐந்து நிமிடம் முன்னதாகவே அலுவலகம் வந்தடைந்து அலுவலக நண்பர்களுடன் மகிழ்ச்சியுடன் முகமன்களைப் பரிமாறி அன்றைய வேலைகளைத் திட்டமிடுகிறீர்கள் . நீங்கள் மகிழ்ச்சியுடன் பணிபுரிவதைக் கண்டு மேலதிகாரி பாராட்டுகிறார். மேலதிகாரியின் பாராட்டு கிடைத்த சந்தோஷத்தோடு மாலை வீடு வருகின்றீர்கள். மனைவியும் மகளும் வாசலில் மகிழ்ச்சியுடன் உங்கள் வரவை எதிர்பார்த்துக் காத்திருப்பதைக் காண்கின்றீர்கள் . உங்கள் மனதில் மேலும் சந்தோஷம் களைகட்டுகின்றது!

வித்தியாசங்களைப் பார்த்தீர்களா?

இரண்டு விதமான தொடர் நிகழ்ச்சிகள்! இரண்டும் ஒரே மாதிரித் தொடங்கின. வெவ்வேறு விதமாக முடிந்தன .

ஏன்?

காரணம், நிகழ்வுகளை நீங்கள் எதிர்கொண்ட விதம்தான்.
நடந்து முடிந்த சம்பவத்தின் முதல் 10% நிகழ்வினைக் கட்டுப்படுத்தவோ, மாற்றியமைக்கவோ உங்களால் முடியாது .
ஆனால் அதனைத் தொடர்ந்த மீதி 90% நிகழ்வினைத் தீர்மானித்தது , நீங்கள்தான். அதாவது, நீங்கள் அந்த முதல் 10% சம்பவத்தை எதிர் கொண்ட விதம்தான். இந்த 90/10 கொள்கையை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதற்கு இதோ சில வழிமுறைகள்:

யாராவது உங்களைத் தாழ்வாகப் பேசினால் ஈரத்தை முழுதும் உள்வாங்கும் பஞ்சுபோல ஆகி விடாதீர்கள் .
அவர்களின் வார்த்தைகள் கண்ணாடியின் மீது விழும் தண்ணீர் போல வழிந்து ஓடட்டும். உங்களுக்கு எதிரான எந்த வார்த்தையும் உங்களைப் பாதிக்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
சரியானபடி அதனை எதிர் கொண்டால் உங்களின் நாள் இனிய நாளாக அமையும்.
தவறான எதிர்கொள்ளலால் நீங்கள், நல்ல ஒரு நண்பரை இழக்கலாம் ; உங்களின் வேலையை இழக்கலாம் ; மன அழுத்தத்திற்கும் ஆளாகலாம்.

உங்கள் வாகனத்தை ஒருவர், சாலை விதிகளை மீறி தவறான ரீதியில் முந்திச் சென்றால் நீங்கள் எவ்வாறு எதிர் கொள்வீர்கள்?
பொறுமையை இழந்து கடுகடுப்பாகி விடுவீர்களா?
உங்கள் வாகனத்தின் ஸ்டீரிங்கை கோபத்தால் குத்துவீர்களா? ( ஒரு நண்பர் குத்தியதில் ஸ்டீரிங் கழன்று விட்டது!) திட்டித் தீர்ப்பீர்களா ?
உங்களின் ரத்த அழுத்தம் எகிறுகிறதா?
முந்திச் சென்றவரின் வாகனத்தின் மீது மோத முயல்வீர்களா?
பத்து வினாடி தாமதமாகச் சென்று சேர்ந்தால் யாராவது உங்களைக் குற்றம் கூறப் போகிறார்களா?
உங்களின் நிதானமான வாகன ஓட்டத்தை மற்றவர்கள் கெடுக்க ஏன் அனுமதிக்க வேண்டும்?.

90/10 கொள்கையை நினை விற் கொண்டு, அது பற்றிய சஞ்சலத்திலிருந்து விடுபடுங்கள்

உங்களை வேலையிலிருந்து விலக்கி விட்டார்கள் என்ற தகவல் தங்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
அதனால் ஏன் சஞ்சலமடைய வேண்டும்? ஏன் தூக்கத்தை இழக்க வேண்டும்?.
மன வேதனைக்காகச் செலவிடும் சக்தியை வேலை தேடுவதற்காகச் செலவிடுங்கள் . கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் .

விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது .
அதன் காரணமாக அன்றைக்குச் செயல்படுத்த வகுத்திருந்த உங்கள் திட்டங்களெல்லாம் பாழாகப் போய் விடுகின்றன.
அதற்காக விமானப் பணிப்பெண் மீது ஏன் எரிந்து விழ வேண்டும்?. விமானம் புறப்படுவதற்கும் பணிப்பெண்ணுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
அந்தத் தாமத நேரத்தைப் புத்தகம் படிப்பதிலோ, அருகிலிருக்கும் பயணியுடன் நல்ல கருத்துகளைப் பரிமாறுவதிலோ செலவிடுங்கள்.
நாமே ஏன் மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? அது நிலைமையை இன்னும் மோசமாக்கி விடும்.

90/10 கொள்கை பற்றி இப்போது தெளிவாகப் புரிந்திருக்குமே!
இந்தக் கொள்கைக்குச் செயல் வடிவம் கொடுத்துப் பாருங்கள்.
அதன் பின் விளைவுகள் மூக்கில் விரலை வைக்கும் அளவுக்கு வியப்பாக இருக்கும்!
இதனைப் பயன்படுத்துவதால் நீங்கள் எதையும் இழக்கப்போவதில்லை.
90/10 கொள்கையின் விளைவுகள் வியப்பானவை !

மிகச் சிலர்தான் இக்கொள்கை பற்றி அறிந்து, அதனை உபயோகித்துப் பார்க்கிறார்கள்.
கோடிக்கணக்கானோர் தேவையில்லாத மன அழுத்தத்தாலும், சோதனைகளாலும், பிரச்சனைகளாலும், மனவேதனைகளாலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் .
நாம் அனைவரும் 90/10 கொள்கையைப் புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்திப் பார்க்க வேண்டும் .
அது உங்கள் வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிடும்.
நம் வாழ்க்கையை நாம் அனுபவித்து மகிழ்வோமாக!

வெள்ளி, 6 மே, 2011

காக்கா ஏன் கறுப்பாச்சு? (பர்மா நாட்டு நாடோடிக் கதை)



ரொம்ப காலத்துக்கு முன்னாடி காக்கா
வெள்ளையா இருந்துச்சாம். வெள்ளைன்னா அப்படி ஒரு வெள்ளை. அப்ப எல்லாம்
காக்கா ரொம்ப தூரம் பறக்குமாம். சூரியன் வரைக்கும் பறந்து போகுமாம்.அப்படி
இருந்த காக்கா எப்படி கருப்பாச்சு? ஊங் குட்டுங்க செல்றேன்..


சூரியபூர் நாட்டோட
ராஜாவுக்கு ரொம்ப வருஷம் கழிச்சு அழகான இளவரசி பிறந்தாங்கலாம். கொள்ளை
அழகு. குழந்தையில இருந்து வீட்டை விட்டே வெளிய வரலையாம்.நல்லா
பெரியவங்களாகி கல்யாண வயசுல வெளிய விளையாட வந்தாங்கலாம். அவங்க பேரு
அங்கிகா. அவங்க விளையாடறத பாத்த சூரியனுக்கு அவங்களை ரொம்ப பிடிச்சு
போச்சாம். இளவரசிக்கும் சூரியனை பிடிச்சிடுச்சாம். தினமும் விடியற்காலையில
எழுந்ததில இருந்து சூரியன் கிட்ட தான் பேசிட்டு இருப்பாங்கலாம். சூரியனும்
பூமிய சுத்திக்கிட்டே இளவரசிகிட்ட பேசிட்டு இருந்ததாம். ரொம்ப நல்ல
நண்பர்களா மாறிட்டாங்க. ஒரு நாள் சூரியன் இந்த இளவரசிக்கு பரிசு கொடுக்க
நினைச்சுதாம்.



சூரியன் கிட்ட வரைக்கும் காக்கா
பறந்துச்சு இல்லையா? அதனால சூரியன் ஒரு காக்காவ கூப்பிட்டு பையில
சந்தனம்,வாசனை திரவியங்கள், முத்து மாலை எல்லாம் கொடுத்து இளவரசிகிட்ட
கொடுத்துடுன்னு சொல்லிட்டு மறஞ்சி போச்சாம். சாய்ந்திரம் ஆகிடுச்சுன்னா
சூரியன் தூங்க போயிடும் இல்லையா? காக்கா அந்த பைய தூக்கிகிட்டு இளவரசி
இருந்த அரண்மனைய நோக்கி பறந்து போயிட்டு இருந்துச்சாம்.



வழியில திருமண ஊர்வலம்
போயிட்டு இருந்திருக்கு. நிறைய பழங்கள்,உணவுப்பொருட்கள் எடுத்துட்டு
போனாங்க போல.காக்காவுக்கு கொஞ்ச உணவாச்சும் கிடைக்குமேன்னு ஆசை.
அரண்மனைக்கு போயிட்டு வந்தா தாமதமாகி போகும். சரின்னு அந்த பைய ஒரு மரத்தில
மாட்டிட்டு திருமண ஊர்வலத்துக்கு போச்சாம். மரத்துக்கு கீழ இருந்த
ஒருத்தன் இந்த காக்கா பைய வெச்சுட்டு போனதை பாத்துகிட்டே இருந்தானாம். நல்ல
வாசனை வந்தது. அதனால மரத்தில ஏறி பைய திறந்து பாத்து இருக்கான். பைக்கு
உள்ள சூரியன் கொடுத்து அனுப்பின எல்லா பொருளையும் பாத்து சொக்கி
போயிட்டானாம்.உடனே எல்லாத்தையும் எடுத்துகிட்டு மரத்தில இருந்த குப்பை
எல்லாம் பையில எடுத்து போட்டுட்டு கிளம்பிட்டான்.




காக்கா நல்லா சாப்பிட்டு
வந்துச்சாம். பைய எடுத்துகிட்டு இளவரசி அரண்மனைக்கு போயிடுச்சாம்.அங்க
இளவரசிகிட்ட சூரியன் கொடுத்த பைய கொடுத்துச்சாம். திறந்து பார்த்த
இளவரசிக்கு அதிர்ச்சி. ச்ச..இந்த சூரியன் ஏன் இப்படி பண்ணிடுச்சு. என் மேல
அன்பே இல்ல. எல்லாம் நடிப்பு. அவன் பேச்சு இனிமேல் டூன்னு சொல்லிட்டு பைய
விசிரியடிச்சிடுச்சாம்.




மறுநாள் காலை,சந்தோஷமா
இளவரசிய பார்க்கலாம்ன்னு வந்த சூரியனுக்கு தூக்கி வாரி போட்டுச்சாம். அந்த
பை கீழ விழுந்திருந்தத பாத்தே ஏதோ தப்பு நடந்திருக்குதுன்னு
புரிஞ்சிடுச்சாம்.பயங்கர கோபம் வந்துடுச்சாம். காக்காவை பார்த்து கோவமா
பாத்த உடனே வெள்ளையா இருந்த காக்கா கறுப்பா மாறிடுச்சாம். அதனால தான்
சூரியன் கிட்டகூட பறக்க முடியாம போச்சாம். கிட்ட இருந்த சூரியனும் பூமி மேல
கோபம் வந்து தூரமா போயிடுச்சாம்.

இப்ப தெரிஞ்சதா காக்கா
ஏன் காக்கா கறுப்பாச்சுன்னு?

சிலபேர் கம்ப்யூட்டர் கதி என்று கிடப்பார்கள்


சிலபேர் கம்ப்யூட்டர் கதி என்று கிடப்பார்கள் .வேலை

 நிமித்தமாக இருந்தால் சரி .இங்கு ஒருத்தர் வாழ்கையும்

 எப்படி தொடங்கி எப்படி முடிகிறது என்று பாருங்கள் .

அப்பா மடியில் குழந்தையாய் உள்ள போதும்
குழந்தையாய் உள்ள போதும்
வளர்ந்த போதும்
உண்ணும் போதும்
உறங்கும் போதும்
காலைகடன் முடிக்கும் போதும்
குளிக்கும் போதும்..... யார் கூப்பிட்டாலும்
அலுவலகத்திலும்
வெளியில் செல்லும்போதும்
உடம்பு சரிஇல்லாமல் போனாலும்
குடும்பத்தை பற்றி கவலை படாமல்
இதற்கு மேல் கேட்டால் இது தான் மாடர்ன் லைப் என்பார்கள்
மேலும் கேட்டால் நான் கம்ப்யூட்டர் -க்கு அடிமை இல்லை என்பார்கள்
கம்ப்யூட்டர் எச்சரிக்கும் அதையும் மீறி இருப்பார்கள்
இப்படியே போனால் இதுதான் கதி
ஆனால் ஒண்ணுங்க இவர்கள் இப்படி ஆனாலும் கவலைப்பட மாட்டாங்க,
ஏன்னா பாருங்க நீங்களே
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
அப்பவும் லைப் என்ஜாய் தான்
STORY CONT.....

குரங்கு சிலபேர் மனத்திலும் இருக்கும்


குரங்கு மரத்திலும் இருக்கும் சிலபேர் மனத்திலும் இருக்கும்.
கொழுமை வில்லிலும் இருக்கும் சிலபேர் சொல்லிலும் இருக்கும். நரி வனத்திலும் இருக்கும் சிலபேர் கரத்திலும் இருக்கும்
நாகம் புற்றிலும் இருக்கும் அதுபோல் சுற்றமும் இருக்கும் நச்சு தலையிலும் இருக்கும் சிலபேர் உடலிலும் இருக்கும்
வஞ்சம் வழக்கிலும் இருக்கும் குடும்ப கணக்கிலும் இருக்கும் மரணம் பிறப்பிலும் இருக்கும் சிலபேர் இறப்பிலும் இருக்கும்
மரணம் மண்ணிலும் இருக்கும் மணந்த பெண்ணிலும் இருக்கும்
நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து நல்லவர்போல் நடிப்பார்
முகத்திற்கு நேரே சிரிப்பார்- கண்கள் முகத்திற்குப் பின்னால் சீறும்
சிரிக்கின்ற உதட்டிலும் விஷம் இருக்கும் உரைக்கின்ற மொழியிலும் சதி இருக்கும் அணைக்கின்ற கையில் வாளிருக்க்கும் அறிந்து கொண்டால் நல் வாழ்விருக்கும்
Share

அடி என்னடி ராக்கம்மா


அடி என்னடி ராக்கம்மா என்னென்ன



பாடல்: அடி என்னடி ராக்கம்மா என்னென்ன நினைப்பு
படம் -பட்டிக்காடா பட்டணமா
இசை - எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர்: கவியரசு கண்ணதாசன்
பாடியவர் - டி.எம். செளந்தரராஜன்


அடி என்னடி ராக்கம்மா என்னென்ன நினைப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு
கண்ணீரில் நனையுதடி

கல்யாண மேளங்கள் மணியோசை
என் கவலைக்கு தாளமடி
சொல்லாத எண்ணங்கள் பலகோடி
என் துன்பத்தின் தீபமடி
பெண்ணாக நான் நினைத்த மண் வீடு கரைந்து
தண்ணீரில் போனதடி
என் பட்டம் என் திட்டம் என் சட்டம்
அடி ராக்கம்மா காற்றாக பறந்ததடி
காற்றாக பறந்ததடி

எல்லோர்க்கும் ஊர்கோலம் இரண்டு தரம்
அதில் ஒரு கட்டம் முடிந்ததடி
தாயார்க்குப் பின்னாலே சம்சாரம் - அது
தடம் கொஞ்சம் பிரண்டதடி
பண்பாடு காப்பதற்கு பெண் பார்த்து முடித்தேன்
என் பாடு மயங்குதடி
என் வீடும் என் வாழ்வும் ஒரு கோயில்
அடி ராக்கம்மா என் தெய்வம் சிரிக்குதடி

அடி என்னடி ராக்கம்மா என்னென்ன நினைப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு
கண்ணீரில் நனையுதடி

வியாழன், 5 மே, 2011

சில நேரங்களில் சில மனிதர்கள் --என்.கணேசன்

நியூயார்க் நகரத்தின் சுரங்கப்பாதை ஒன்றில் பிரபல எழுத்தாளர் ஒருவர் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் அமைதியாக அமர்ந்திருந்தார். ஆட்கள் அதிகமில்லாத அந்த இடத்தில் ஒரு அமைதியான சூழ்நிலை நிலவியது. சிலர் கண்களை மூடி அமர்ந்திருந்தார்கள். சிலர் பத்திரிகைகள் படித்தபடி அமர்ந்திருந்தார்கள். திடீரென்று அங்கு ஒருவர் தன் இரண்டு குழந்தைகளுடன் வந்தார். அவர் அந்த எழுத்தாளர் அருகே கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்தார். அந்த சிறுவர்கள் இருவரும் ஆறு வயதைத் தாண்டாதவர்கள். அவர்கள் விளையாட ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்தில் அங்கிருந்த அமைதி காணாமல் போயிற்று. குழந்தைகள் சத்தம் போட்டு விளையாட ஆரம்பித்து, பின்னர் சண்டையிட்டுக் கொண்டு ஒருவருக்கொருவர் பொருட்களை எடுத்து வீசிக்கொள்ள ஆரம்பித்தனர். அந்த தந்தையோ அந்த சிறுவர்களைக் கண்டிப்பதாகத் தெரியவில்லை. கண்களைத் திறக்காமல் அப்படியே அமர்ந்திருந்தார்.

அங்கு அமர்ந்திருந்த மற்றவர்கள் எரிச்சலுடன் அவரைப் பார்த்ததை அவர் அறியவில்லை. அந்த எழுத்தாளரோ தன்னம்பிக்கை, பொறுமை பற்றியெல்லாம் நிறைய எழுதிக் குவித்த எழுத்தாளர். அவரே பொறுத்து பொறுத்துப் பார்த்து ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து தன்னருகே கண்ணை மூடிக் கொண்டு அமர்ந்திருந்த அந்த நபரிடம் சொன்னார். "உங்கள் பிள்ளைகள் மற்றவர்களைத் தொந்திரவு செய்கிறார்கள். அவர்களைக் கொஞ்சம் கட்டுப்படுத்துங்களேன்."

அந்த நபர் கண்களை மெள்ளத் திறந்தார். "ஆமாம்....ஏதாவது செய்ய வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு முன்பு அவர்கள் தாய் இறந்து விட்டாள். அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அவள் உடலைத் தர சிறிது நேரம் ஆகும் என்றதால் அங்கிருக்க முடியாமல் இங்கு வந்தேன். இனி என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அவர்களுக்கும் இதை எப்படி எடுத்துக் கொள்வது, என்ன செய்வது என்று தெரியவில்லை என்று நினைக்கிறேன்.... மன்னிக்கவும்"

அந்த எழுத்தாளர் அதுவரை அந்த நபர் மீதும், அந்தச் சிறுவர்கள் மீதும் கொண்டிருந்த கோபமெல்லாம் ஒரு கணத்தில் காற்றாய் பறந்து போயிற்று. அதற்குப் பதிலாக இரக்கமும் பச்சாதாபமும் மனதில் எழ அவர் மனைவி இறந்ததற்கு வருத்தம் தெரிவித்து விட்டு ஏதாவது உதவி தேவையா என்று மனதாரக் கேட்டார்.

அந்த எழுத்தாளர் 'செயல்திறன் மிக்க மனிதர்களின் ஏழு பழக்கங்கள்' என்ற புகழ் பெற்ற புத்தகத்தை எழுதிய ஸ்டீபன் ஆர். கோவே. இந்த நிகழ்ச்சியில் அந்த சிறுவர்களின் செயல்கள் மாறவில்லை. அந்த அமைதியான சூழ்நிலை மீண்டும் திரும்பவில்லை. ஆனால் அந்த குழந்தைகளும், அவர்கள் தகப்பனும் இருக்கும் சூழ்நிலை விளங்கியதும் அவர் மனநிலை முற்றிலுமாக மாறி விட்டது.

இன்னொரு நிகழ்ச்சி. கராத்தே, குங்·பூ கலைகளில் எல்லாம் மிகவும் தேர்ச்சி படைத்த ஒரு வீரர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் தியான வகுப்புகளுக்கும் தொடர்ந்து செல்பவர். ரயிலில் நன்றாகக் குடித்து விட்டு ஒருவன் ரயில் பயணிகள் ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு வம்பு செய்து சண்டையிட்டுக் கொண்டு இருந்தான். நேரமாக ஆக அவன் வார்த்தைப் பிரயோகங்கள் மிக மோசமாகப் போய்க் கொண்டு இருந்தன. ஒருசிலர் திரும்பப் பேசினர். ஒருசிலர் முகம் சுளித்துக் கொண்டு வேறிடத்திற்குப் போய் அமர்ந்து கொண்டார்கள். நீண்ட பயணமானதால் இதை நிறைய நேரம் பார்க்க நேர்ந்த கராத்தே வீரருக்கு கோபம் பொங்கி வந்தது. போய் இரண்டு தட்டு தட்ட வேண்டும் என்று நினைக்கையில் அத்தனை நேரம் அமைதி காத்த இன்னொரு பயணி அந்தக் குடிகாரனை நோக்கி சென்றதைக் கண்டு நிதானித்தார்.

அந்தப் பயணியும் தன்னைப் போலவே அடிக்கத் தான் செல்கிறார் என்று நினைத்த கராத்தே வீரருக்கு வியப்பு ஏற்படும் வண்ணம் அந்த நபர் குடிகாரன் அருகில் அமர்ந்தார். கனிவுடன் அவனிடம் கேட்டார். "உனக்கு என்ன பிரச்சனை?"

அந்தக் குடிகாரன் அந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை போலத் தெரிந்தது. திகைத்துப் போய் அவரை ஒரு நிமிடம் ஒன்றும் சொல்லாமல் பார்த்த அவன் கண்களில் நீர் திரண்டது. அவர் தோளில் சாய்ந்து கொண்டு விம்மி அழ ஆரம்பித்தான். அழுகையினூடே தனக்குத் திடீரென்று வேலை போன செய்தியைச் சொன்னான். தன் சம்பாத்தியத்தை நம்பி வீட்டில் மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருப்பதைச் சொன்னான். அந்த முதலாளியின் இரக்கமற்ற குணத்தைச் சொன்னான். சொல்லி அழுது முடித்த பின் எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த அந்த நண்பர் குடிப்பது எந்தப் பிரச்சனையையும் வளர்த்துமேயொழிய குறைக்காது என்று சொன்னார். முதலாளி மேல் இருந்த கோபத்தை சக பயணிகளிடம் காட்டுவது சரியல்ல என்று சொன்னார். குடிப்பதற்கு பதிலாக அடுத்த வேலை எங்கு கிடைக்கும், அதற்காக யாரை அணுகலாம் என்று யோசித்திருந்தால் ஒரு வழி கிடைத்திருக்கலாம் என்று சொன்னார்.

அவர் பேசப் பேச அந்தக் குடிகாரன் அடைந்த மாற்றத்தைக் கண்ட கராத்தே வீரர் அது தனக்குப் பெரிய படிப்பினையாக அமைந்தது என்று ஒரு கட்டுரையில் எழுதியதை நான் படித்தேன். அவர் எழுதியிருந்தார். "அந்த நபர் ஒரு நிமிடம் என்னை முந்திக் கொண்டு அந்தக் குடிகாரனிடம் போயிருக்கா விட்டால் கண்டிப்பாக நன்றாக அவனை அடித்து காயப்படுத்தி இருப்பேன் என்பதில் சந்தேகமில்லை. முதலிலேயே வேலை போன அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் என்னாலேயே மேலும் துக்கம் விளைந்திருக்கும். அவனுடைய செய்கைகளுக்குப் பின் உள்ள துக்கத்தை அந்த நபர் உணர்ந்திருக்க வேண்டும். அவருடைய கனிவான செய்கை அவன் புண்ணுக்கு மருந்தாக அமைந்தது. அவன் அமைதியடைந்தான். அவன் இறங்க வேண்டிய இடம் வரை அவனிடமிருந்து அதற்குப் பிறகு ஒரு சத்தமோ, தொந்திரவோ இருக்கவில்லை. அதைப் பார்த்துக் கொண்டிருந்த எல்லோருக்கும் அவன் மீதிருந்த எரிச்சலும், கோபமும் விலகியது என்பதை சொல்லத் தேவையில்லை."

முதல் நிகழ்ச்சியில் இருக்கும் நியாயம் இரண்டாவது நிகழ்ச்சியில் இல்லை என்று சிலர் நினைக்கலாம். ஆனால் அந்த இரண்டாவது நிகழ்ச்சியிலும் அந்த செயலுக்குப் பின்னால் ஒரு காரணம் இருப்பதாக உணர்ந்த ஒரு மனிதர் காட்டிய கனிவு எப்படி அந்த சூழ்நிலையை அடியோடு மாற்றியது என்பதைப் பாருங்கள்.

நமக்குத் தவறாகத் தோன்றும் பல செயல்களுக்குப் பின்னால் பல ஆழமான காரணங்கள் இருக்கின்றன. சில காரணங்கள் நம்மால் ஏற்றுக் கொள்ள முடிந்தவையாக இருக்கலாம். சில காரணங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவையாக இருக்கலாம். ஆனால் அந்தக் காரணங்களை அறியும் போது புரிந்து கொள்ளல் சாத்தியமாகிறது. மன்னித்தல் சுலபமாகிறது.

எப்போதும் ஒரே மாதிரி நடந்து கொள்ள மனிதன் எந்திரமல்ல. எந்திரங்கள் கூட பழுதாகும் போது சில நேரங்களில் சில மனிதர்கள் நம் எதிர்பார்ப்புக்கு எதிர்மாறாக நடந்து கொள்வது அதிசயமல்ல. அது போன்ற சமயங்களில் அவர்கள் மீது கோபம் கொள்வதற்குப் பதிலாக ஏதாவது காரணம் இருக்கலாம் என்ற சிந்தனை நமக்குள் எழுமானால் அதைப் பெரிதுபடுத்தாமல் நகர்கிற பக்குவம் நமக்கு வந்து விடும்.

செவ்வாய், 3 மே, 2011

மகாகவி பாரதியார் கவிதைகள்


பாரத நாடு
1.வந்தே மாதரம்
2.வந்தே மாதரம்
3.வந்தே மாதரம்
4.பாரத நாடு
5.பாரத தேசம்
6.எங்கள் நாடு7.ஜயபாரதம்!
8.பாரத மாதா9.எங்கள் தாய்
10.வெறி கொண்ட தாய்11.பாரத மாதா திருப்பள்ளியெழுச்சி
12.பாரத மாதா நவரத்தின மாலை13.பாரத தேவியின் திருத்தசாங்கம்
14.தாயின் மணிக்கொடி15.பாரத ஜனங்களின் தற்கால நிலைமை
16.போகின்ற பாரதமும்-வருகின்ற பாரதமும்17.பாரத சமுதாயம்
18.ஜாதீய கீதம்-1(மொழிபெயர்ப்பு)19.ஜாதீய கீதம்-2(புதிய மொழி பெயர்ப்பு)
2.தமிழ் நாடு
20.செந்தமிழ் நாடு21.தமிழ்த் தாய்
22.தமிழ்23.தமிழ்மொழி வாழ்த்து
24.தமிழ்ச் சாதி25.வாழிய செந்தமிழ்

 3.சுதந்திரம்
26.சுதந்திரப் பெருமை27.சுதந்திரப் பயிர்
28.சுதந்திர தாகம்29.சுதந்திர தேவியின் துதி
30.விடுதலை31.சுதந்திரப் பள்ளு
4. தேசீய இயக்கப் பாடல்கள்
32.சத்ரபதி சிவாஜி33.கோக்கலே சாமியார் பாடல்
34.தொண்டு செய்யும் அடிமை35.நம்ம ஜாதிக்கு அடுக்குமோ?
36.நாம் என்ன செய்வோம்!37.பாரத தேவியின் அடிமை
38.வெள்ளைக்கார விஞ்ச்துரை கூற்று39.தேச பக்தர் சிதம்பரம்பிள்ளை மறுமொழி
40.நடிப்புச் சுதேசிகள்
5. தேசீயத் தலைவர்கள்
41.மகாத்மா காந்தி பஞ்சகம்42.குரு கோவிந்தர்
43.தாதாபாய் நவுரோஜி44.பூபேந்திரர் விஜயம்
45.வாழ்க திலகன் நாமம்46.திலகர் முனிவன் கோன்
47.லாஜபதி48.லாஜபதியின் பிரலாபம்
49.வ.உ.சி.-க்கு வாழ்த்து
6. பிற நாடுகள்
50.மாஜினியின் சபதம்51.பெல்ஜியத்திற்கு வாழ்த்து
52.புதிய ருஷியா53.கரும்புத் தோட்டத்திலே

இரண்டாம் பாகம்

தெய்வப் பாடல்கள்

1. தோத்திப் பாடல்கள்
1.விநாயகர் நான்மணி மாலை2.முருகா! முருகா!
3.வேலன் பாட்டு4.கிளிவிடு தூது
5.முருகன் பாட்டு6.வள்ளிப் பாட்டு-1
7.வள்ளிப் பாட்டு-28.இறைவா! இறைவா!
9.போற்றி அகவல்10.சிவ சக்தி
11.காணி நிலம் வேண்டும்12.நல்லதோர் வீணை
13.மஹாசக்திக்கு விண்ணப்பம்14.அன்னையை வேண்டுதல்
15.பூலோக குமாரி16.மஹாசக்தி வெண்பா
17.ஓம் சக்தி18.பராசக்தி
19.சக்திக் கூத்து20.சக்தி
21.வையம் முழுதும்22.சக்தி விளக்கம்
23.சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்24.சக்தி திருப்புகழ்
25.சிவசக்தி புகழ்26.பேதை நெஞ்சே
27.மஹாசக்தி28.நவராத்திரிப் பாட்டு(உஜ்ஜயினீ)
29.காளிப்பாட்டு30.காளி ஸ்த்தோத்திரம்
31.யோக சித்தி32.மகா சக்தி பஞ்சகம்
33.மஹாசக்தி வாழ்த்து34.ஊழிக்கூத்து
35.காளிக்குச் சமர்ப்பணம்36.காளி தருவாள்
37.மஹா காளியின் புகழ்38.வெற்றி
39.முத்துமாரி40.தேச முத்துமாரி
41.கோமதி மஹிமை42.சாகா வரம்
43.கோவிந்தன் பாட்டு44.கண்ணனை வேண்டுதல்
45.வருவாய் கண்ணா!46.கண்ண பெருமானே!
47.நந்த லாலா48.கண்ணன் பிறப்பு
49.கண்ணன் திருவடி50.வேய்ங்குழல்
51.கண்ணம்மாவின் காதல்52.கண்ணம்மாவின் நினைப்பு
53.மனப் பீடம்54.கண்ணம்மாவின் எழில்
55.திருக்காதல்56.திருவேட்கை
57.திருமகள் துதி58.திருமகளைச் சரண்புகுதல்
59.ராதைப் பாட்டு60.கலைமகளை வேண்டுதல்
61.வெள்ளைத் தாமரை62.நவராத்திரிப் பாட்டு(மாதா பராசக்தி)
63.மூன்று காதல்64.ஆறு துணை
65.விடுதலை வெண்பா66.ஜெயம் உண்டு
67.ஆரிய தரிசனம்68.சூரிய தரிசனம்
69.ஞாயிறு வணக்கம்70.ஞானபாநு
71.சோமதேவன் புகழ்72.வெண்ணிலாவே!
73.தீ வளர்த்திடுவோம்!74.வேள்வித் தீ
75.கிளிப் பாட்டு76.யேசு கிறிஸ்து
77.அல்லா
2. ஞானப் பாடல்கள்
78.அச்சமில்லை79.ஜெய பேரிகை
80.சிட்டுக் குருவியைக் போலே81.விடுதலை வேண்டும்
82.வேண்டும்83.ஆத்ம ஜெயம்
84.காலனுக்கு உரைத்தல்85.மாயையைப் பழித்தல்
86.சங்கு87.அறிவே தெய்வம்
88.பரசிவ வெள்ளம்89.பொய்யோ?மெய்யோ
90.நான்91.சித்தாந்தச் சாமி கோயில்
92.பக்தி93.அம்மாக்கண்ணு பாட்டு
94.வண்டிக்காரன் பாட்டு95.கடமை அறிவோம்
96.அன்பு செய்தல்97.சென்றது மீளாது
98.மனத்திற்குக் கட்டளை99.மணப் பெண்
100.பகைவனுக்குகருள்வாய்101.தெளிவு
102.கற்பனையூர்

மூன்றாம் பாகம்

பல்வகைப் பாடல்கள்

1. நீதி
1.புதிய ஆத்திசூடி2.பாப்பாப் பாட்டு
3.முரசு
2.சமூகம்
4.புதுமைப் பெண்5.பெண்கள் வாழ்க!
6.பெண்கள் விடுதலைக்கும்மி7.பெண் விடுதலை
8.தொழில்9.மறவன் பாட்டு
10.நாட்டுக் கல்வி11.புதிய கோணங்கி
3.தனிப் பாடல்கள்
12.காலைப் பொழுது13.அந்திப் பொழுது
14.நிலாவும் வான்மீனும் காற்றும்15.மழை
16.புயற் காற்று17.பிழைத்த தென்னந்தோப்பு
18.அக்கினிக் குஞ்சு19.சாதாரண வருஷத்துத் தூமகேது
20.அழகுத் தெய்வம்21.ஒளியும் இருளும்
22.சொல்23.கவிதைத் தலைவி
24.கவிதைத் காதலி25.மது
26.சந்திரமதி
4. சான்றோர்
27.தாயுமானவர் வாழ்த்து28.நிவேதிதா
29.அபேதாநந்தா30.ஓவியர்மணி இரவிவர்மா
31.சுப்பராம தீட்சிதர்32.மகாமகோபாத்தியாயர்
33.வெங்கடேசு ரெட்டப்ப பூபதி34.ஹிந்து மதாபிமான சங்கத்தார்
35.வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு
5. சுய சரிதை
36.கனவு37.பாரதி அறுபத்தாறு
6. வசன கவிதை
38.காட்சி39.சக்தி
40.காற்று41.கடல்
42.ஜகத் சித்திரம்43.விடுதலை

நான்காம் பாகம்

முப்பெரும் பாடல்கள்

1. கண்ணன் பாட்டு
1.கண்ணன்-என் தோழன்2.கண்ணன்-என் தாய்
3.கண்ணன்-என் தந்தை4.கண்ணன்-என் சேவகன்
5.கண்ணன்-என் அரசன்6.கண்ணன்-என் சீடன்
7.கண்ணன்-என் சற்குரு8.கண்ணம்மா-என் குழந்தை
9.கண்ணன்-என் விளையாட்டுப் பிள்ளை10.கண்ணன்-என் காதலன்
11.கண்ணன்-உறக்கமும் விழிப்பும்12.கண்ணன்-காட்டிலே தேடுதல்
13.கண்ணன்-பாங்கியைத் தூது விடுத்தல்14.கண்ணன்-பிரிவாற்றாமை
15.கண்ணன்-என் காந்தன்16.கண்ணம்மா-என் காதலி காட்சி வியப்பு
17.கண்ணம்மா-என் பின்னே வந்து நின்று கண் மறைத்தல்18.கண்ணம்மா-என் முத்திரை களைதல்
19.கண்ணம்மா-என் நாணிக் கண் புதைத்தல்20.கண்ணம்மா-என் குறிப்பிடம் தவறியது
21.கண்ணம்மா-என் யோகம்22.கண்ணம்மா-என் ஆண்டான்
23.கண்ணம்மா- எனது குலதெய்வம்
2. பாஞ்சாலி சபதம் முதற் பாகம்
துரியோதனன் சூழ்ச்சிச் சருக்கம்
1.பிரம்ம ஸ்துதி2.சரஸ்வதி வணக்கம்
3.ஹஸ்தினாபுரம்4.துரியோதனன் சபை
5.துரியோதனன் பொறாமை6.துரியோதனன் சகுனியிடம் சொல்வது
7.சகுனியின் சதி8.சகுனி திரிதராட்டிரனிடம் சொல்லுதல்
9.திரிதராட்டிரன் பதில் கூறுதல்10.துரியோதனன் சினங் கொள்ளுதல்
11.துரியோதனன் தீமொழி12.திரிதராட்டிரன் பதில்
13.துரியோதனன் பதில்14.திரிதராட்டிரன் சம்மதித்தல்
15.சபா நிர்மாணம்16.விதுரனைத் தூது விடல்
17.விதுரன் தூது செல்லுதல்18.விதுரனை வரவேற்றல்
19.விதுரன் அழைத்தல்20.தருமபுத்திரன் பதில்
21.விதுரன் பதில்22.தருமபுத்திரன் தீர்மாணம்
23.வீமனுடைய வீரப்பேச்சு24.தருமபுத்திரன் முடிவுரை
25.நால்வரும் சம்மதித்தல்26.பாண்டவர் பயணமாதல்
27.மாலை வருணனை
சூதாட்டச் சருக்கம்
28.வாணியை வேண்டுதல்29.பாண்டவர் வரவேற்பு
30.பாண்டவர் சபைக்கு வருதல்31.சூதுக்கு அழைத்தல்
32.தருமன் மறுத்தல்33.சகுனியின் ஏச்சு
34.தருமனின் பதில்35.சகுனி வல்லுக்கு அழைத்தல்
36.தருமன் இணங்குதல்37.சூதாடல்
38.நாட்டை வைத்தாடுதல்

இரண்டாம் பாகம்

அடிமைச் சருக்கம்
39.பராசக்தி வணக்கம்40.சரஸ்வதி வணக்கம்
41.விதுரன் சொல்லியதற்குத் துரியோதனன் மறுமொழி சொல்லுதல்42.விதுரன் சொல்வது
43.சூது மீட்டும் தொடங்குதல்44.சகுனி சொல்வது
45.சஹாதேவனைப் பந்தயம் கூறுதல்46.நகுலனை இழத்தல்
47.பார்த்தனை இழத்தல்48.வீமனை இழத்தல்
49.தருமன் தன்னைத்தானே பணயம் வைத்திழத்தல்50.துரியோதனன் சொல்வது
51.சகுனி சொல்வது
திரௌபதியைச் சபைக்கு அழைத்த சருக்கம்
52.திரௌபதியை இழத்தல்53.திரௌபதி சூதில் வசமானது பற்றிக் கௌரவர் கொண்ட மகிழ்ச்சி
54.துரியோதனன் சொல்வது55.திரௌபதியைத் துரியோதனன் மன்றுக்கு அழைத்து வரச் சொல்லியது பற்றி ஜகத்தில் உண்டான அதர்மக் குழப்பம்
56.துரியோதனன் விதுரனை நோக்கி உரைப்பது57.விதுரன் சொல்வது
58.துரியோதனன் சொல்வது59.திரௌபதி சொல்லுதல்
60.துரியோதனன் சொல்வது
சபதக் சருக்கம்
61.துச்சாதனன் திரௌபதியைச் சபைக்குக் கொணர்தல்62.திரௌபதிக்கும் துச்சாதனனுக்கும் சம்வாதம்
63.சபையில் திரௌபதி நீதி கேட்டழுதல்64.வீட்டுமாசார்யன் சொல்வது
65திரௌபதி சொல்வது66.வீமன் சொல்வது
67.அர்ஜீனன் சொல்வது68.விகர்ணன் சொல்வது
69.கர்ணன் பதில்70.திரௌபதி கண்ணனுக்குச் செய்யும் பிரார்த்தனை
71.வீமன் செய்த சபதம்72.அர்ஜீனன் சபதம்
73.பாஞ்சாலி சபதம்
3. குயில் பாட்டு
1.குயில்2.குயிலின் பாட்டு
3.குயிலின் காதற் கதை4.காதலோ காதல்
5.குயிலும் குரங்கும்6.இருளும் ஒளியும்
7.குயிலும் மாடும்8.நான்காம் நாள்
9.குயில் தனது பூர்வ ஜன்மக் கதையுரைத்தல்
புதிதாகச் சேர்க்கப் பெற்ற பாடல்கள்
1.உயிர் பெற்ற தமிழர் பாட்டு2.இளசை ஒருபா ஒருபஃது