ஞாயிறு, 27 மார்ச், 2011

சுனாமி....... எமனின் பினாமி

 சுனாமி....... எமனின் பினாமி


கடலே....!

நாட்டிற்கு  எல்லைப் பாதுகாப்பு  என நினைத்திருந்தேன்!
எல்லைத்  தெய்வமே  உயிரை  பலி வாங்குமோ?
உன் கரையில் கால்களை நனைத்து, நனைத்து
விளையாடும்  கள்ளமில்லா உள்ளங்களைப் பார்!
                 
மணல் வீடு கட்டி கனவு காணும் மழலைகளைப் பார்!
உன் கோரப் பசிக்கு அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?
நீ செய்வதோ எங்களுக்கு பச்சைத் துரோகம்,
இச் செயலுக்கு ஏன் பூகம்பத்துடன் உனக்கு சிநேகம்?

சுனாமியே.......! எமனின் பினாமியே.....!

சுனாமியும், பூகம்பமும் கூட்டுச் சேர்ந்தே வந்து
அழித்தாலும், திரும்பவும் எழுந்து நின்று
வாழ்கையில் வெற்றி பெறுவோம், மற்ற
நட்டினற்கு முன் உதாரணமாய் இருப்போம்!                                             
                                            
மூளைத் திறனும், உழைக்கும் திறனும் அதிகமுண்டு
தோள் கொடுக்க அண்டை நாடுகள் பல உண்டு
வெட்டினாலும் வாழையடி வாழையாய்
தழைத்து ஓங்குவோம், புது உலகம் படைப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக