சனி, 3 நவம்பர், 2012

இராமாயணம்


இராமாயணம் வால்மீகி என்னும் முனிவரால் சமசுக்கிருத மொழியில் இயற்றப்பட்ட மிகப் பழைய இதிகாசமாகும்[1]. இது கிமு 400க்கும் கிபி 200 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இது இந்து சமயத்தின் முக்கியமான நூல்களுள் ஒன்று. மூல நூலான வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவிப் பல இந்திய மொழிகளிலும், பிற நாடுகளின் மொழிகளிலும் இராமாயணம் இயற்றப்பட்டுள்ளது. கம்பர் என்னும் புலவர் இதனைத் தமிழில் எழுதினார். இது கம்ப இராமாயணம் எனப்படுகின்றது. கெமர் மொழியில் உள்ள ரீம்கெர்தாய் மொழியில் உள்ள ராமகியென்லாவோ மொழியில் எழுதப்பட்ட ப்ரா லாக் ப்ரா லாம்மலாய் மொழியின்இக்காயத் சேரி ராமா போன்றவை வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவியவை ஆகும். கோசல நாட்டின் தலை நகரமான அயோத்தியைச் சேர்ந்த ரகு வம்ச இளவரசரான ராமர், அவர் மனைவி சீதைஆகியோரின் வாழ்க்கையை விவரிக்கும் இந்த இதிகாசம், உறவுகளுக்கு இடையேயான கடமைகளை எடுத்துக் காட்டுகின்றது. சிறந்த வேலையாள், சிறந்த தம்பி, சிறந்த மனைவி, சிறந்த அரசன் போன்றோர் எப்படி இருக்கவேண்டும் என்பது இதன் கதை மாந்தர்கள் மூலம் விளக்கப்படுகின்றது.
இராமாயணம் என்னும் பெயர் இராமன்ஆயனம் என்னும் சொற்களின் கூட்டாகும். ஆயனம் என்னும் சொல் சமசுக்கிருதத்தில் பயணம் என்னும் பொருளுடையது. இதனால், இராமாயணம் என்பதுஇராமனின் பயணம் என்னும் பொருள் குறிக்கிறது.

பொருளடக்கம்

  [மறை

மனசே! ரிலாக்ஸ் ப்ளீஸ்…

manase-relax1-tசுவாமி சுகபோதானந்தா அவர்களின் "மனசே! ரிலாக்ஸ் ப்ளீஸ்" என்கிற சுய முன்னேற்றத் தொடர் ஆனந்த விகடனில் வந்து மிகவும் பிரபலமாக வாசகர்களால் பெரிதும் விரும்பி ரசிக்கப் பட்டது. இதே தொடர் பிறகு "நிழல்கள்" ரவி வாசிக்க ஆடியோவிலும் கிடைக்கிறது. எளிய முறையில் சுகபோதானந்தா அவர்களின் சுவாரசியமான நவீன யுகத்திற்கேற்ற வகையில் அமைந்த சொற்பொழிவுகள் பலருக்கும் பயனுள்ளவையாக அமைந்து உள்ளன. மனசே! ரிலாக்ஸ் ப்ளீஸ்! என்ற இந்த புத்தகம் தற்போது சம்ஸ்க்ருதத்தில் மொழி பெயர்க்கப் பட்டு "ஹே மன:! ஸமாஸ்வசிது!" என்ற தலைப்புடன் சம்ஸ்க்ருத பாரதி அமைப்பால் வெளியிடப் பட்டுள்ளது.

பகவத் கீதை


வேயினிக்க இசைத்திடும் கண்ணன்தான்
வேத மன்ன மொழிகளில், “பார்த்தனே
நீ இனிக்கவலாது அறப் போர் செய்தல்
நேர்மை” என்றதோர்செய்தியைக் கூறும் என்
வாயினிக்க வருந் தமிழ் வார்த்தைகள்
வையகத்தினர் நெஞ்சு கவர்ந்திடத்
தாய் இனிக்கருணை செயல் வேண்டும் நின்
சரண மன்றி இங்கோர் சரணில்லையே.
- பாரதியார்
பாரதியாரின் முன்னுரை
கீதையின் பெருமை 
பாரதி பாமாலை
  1. அர்ஜுன விஷாத யோகம்
  2. ஸாங்கிய யோகம்
  3. கர்ம யோகம்
  4. ஞான கர்ம சந்யாச யோகம்
  5. சந்யாச யோகம்
  6. தியான யோகம்
  7. ஞான விஞ்ஞான யோகம்
  8. அக்ஷர பிரம்ம யோகம்
  9. ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்
  10. விபூதி யோகம்
  11. விசுவரூப தரிசன யோகம்
  12. பக்தி யோகம்
  13. க்ஷேத்ர – க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்
  14. குணத்ரய விபாக யோகம்
  15. புருஷோத்தம யோகம்
  16. தெய்வாசுர சம்பத் விபாக யோகம்
  17. சிரத்தாத்ரய விபாக யோகம்
  18. மோஷ சந்நியாச யோகம்
பகவத் கீதை பற்றி குறிப்புகள்

பகவத் கீதை படிக்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் அநேகமாக நம்மில் எல்லாருக்குமே இருக்கும். பகவான் ஸ்ரீ க்ருஷ்ணரின் வார்த்தைகளில் கடல் போன்ற வேத – சாத்திர ஞானத்தின் சாரமாக கீதை விளங்குகிறது. கீதையின் விசேஷமே அது தனி மனிதர்களை நோக்கி பேசுகிறது. கீதையை படிப்பவர்கள் அர்ஜுனனாக உணர்ந்து கொண்டு, பகவான் ஸ்ரீ க்ருஷ்ணரின் உபதேசங்களைக் கேட்கும் போது, அவரவர் துன்பங்களுக்கு மருந்தாக ஆகிறது.
கீதையை தக்க உரையின்றி புரிந்து கொள்வது கடினம். நவீன கால கீதை உரைகளில் பாலகங்காதர திலகர் எழுதிய உரை, அரவிந்த கோஷ் அவர்களின் கீதைக் கட்டுரைகள், நடராஜ குரு அவர்களின் உரை, மற்றும் மகாகவி பாரதியாரின் உரையும் சிகரம் போன்றவை. பாரதியார் சமஸ்க்ருதத்திலும் புலமை மிக்கவர். கீதை மூல ஸ்லோகங்களுக்கு வார்த்தைக்கு வார்த்தை, ரத்தின சுருக்கமாக விளக்க உரை எழுதி உள்ளார். சங்கதம் தளத்தில் பகவத் கீதை மூல ஸ்லோகங்களுடன், மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் உரையை விளக்கமாக இணைத்துத் தருவதில் மிக்கப் பெருமை அடைகிறோம்.
கீதையில் புரிந்து கொள்ளக் கடினமான பகுதிகளும் உண்டு. மிக எளிதாக உதாரணங்களுடன் விளக்கப் படும் பகுதிகளும் உண்டு. கீதையின் சமஸ்க்ருத நடை அவ்வளவு கடினமானது அல்ல. சமஸ்க்ருதம் தெரிந்தவர்களுக்கு கீதை படிக்க இலகுவானது. அதே போல கீதையை மூலத்துடனும், உரையுடனும் படிப்பவர்களுக்கு சமஸ்க்ருதமும் இலகுவாக பிடிபட்டு விடும்.
இத்தளத்தில் வெளியாகி உள்ள கீதை உரையில், மூல ஸ்லோகங்களுக்கு அடுத்த படியாக பதவுரை எழுத கீதாபிரஸ் வெளியிட்டுள்ள புகழ் பெற்ற “தத்வ விவேசனி” நூல் உதவியாக இருந்தது. தெளிவுரையாக பாரதியாரின் உரையை அப்படியே இடம் பெற்றுள்ளது. இதற்கு ஏதுவாக பாரதியாரின் உரையை வலையேற்றி கிடைக்கச் செய்த தமிழ் ஹிந்து தளத்திற்கும் நன்றிகள் பல.

கண்ணனின் ஐந்து வாதங்கள்


கண்ணன் அர்ச்சுனனுக்கு எடுத்துரைக்கும் வாதங்கள் ஐந்து.
  • வேதாந்தப் பார்வை
  • சுயதருமப் பார்வை
  • கருமயோகப் பார்வை
  • பக்திப் பார்வை
  • தத்துவப் பார்வை.

வேதாந்த வாதம்

“வருந்தப்பட வேண்டாததற்கு வருத்தப்படுவது அறிவாளிகளுடைய செயலல்ல. மூன்று காலத்திலும் எந்தப் பொருள் இல்லையோ அதற்கு ஒரு காலத்திலும் இருப்பு என்பதில்லை. இருப்பது போல் தோன்றினாலும் அது நிகழ்காலத் தோற்றம் மட்டும்தான். மூன்று காலத்திலும் எந்தப் பொருள் உள்ளதோ அதற்கு ஒரு காலத்திலும் இல்லாமை என்பதில்லை. புலன்களுக்கு அகப்படாததை இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆன்மா என்ற ஒன்றுதான் அழியாத நிரந்தரமான உட்பொருள். அதை யாராலும் அழிக்க முடியாது. அழிவதாக நமக்கு தெரிவதெல்லாம் உடம்பு தான். “அர்ச்சுனா, எதிரிகளின் மீதுள்ள பாசத்தை விட்டுப் போர் புரி. அவர்கள் உடம்பில் குடிகொண்டிருக்கும் ஆன்மா யாரையும் கொல்லாது, அதை யாராலும் கொல்லவும் முடியாது. அதனால் நீ யாருக்காகவும் வருத்தப்பட வேண்டர்ம்” என்கிறார். இந்த முதல் வாதத்தின் அடிப்படையில் தான் முழு கீதையும் செயல்படுகிறது.

[தொகு]சுயதரும வாதம்

“அர்ச்சுனா, உன்னுடய சுயதருமம் க்ஷத்திரியனுக்குகந்த தருமப்போர் தான். இப்போருக்காக நீ பல ஆண்டுகள் தவமிருந்திருக்கிறாய். போரிலிருந்து பின்வாங்குவது உனக்கு ஒவ்வாத ஒன்று.” ‘சுயதருமமும் உன் சுபாவமும் விதிக்கும் க்ஷ்த்திரிய தருமத்தில் குறை இருந்தாலும் அதைக் கைவிடாதே. எந்தச் செய்கையிலும் நெருப்புக்குப் புகைபோல் ஏதாவதொரு குறை இருக்கத்தான் செய்கிறது’.(18-48)
‘பிறிதொருவனுடைய கடமையை ஏற்று அதை நன்றாகச் செய்தாலும் அதைவிடச் சிறந்தது தன்னுடைய கடமையில் ஈடுபட்டிருப்பதே. அது முறையாக ஆற்றப்படாவிடினும் அதுவே சிறந்தது’ (3-35). ‘சுபாவத்தினால் விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதில் பாவம் சம்பவிப்பதில்லை’ (18-47).
இந்த சுயதருமப் பார்வை எப்படி மற்ற வாதங்களுடன் ஒழுங்காகவும் தர்க்க ரீதியாகவும் பிணைக்கப் படுகின்றது

[தொகு]கருமயோகப் பார்வை

இது கருமயோகம் என்று பெயர் கொண்ட புரட்சி மிகுந்த உபதேசம். எளிதில் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடியது. ‘ஒவ்வொரு மனிதனும் செய்யவேண்டிய கடமைகள் பல. அவைகளைச் செய்வதில் விருப்போ அல்லது வெறுப்போ ஒரு பிரச்சினை ஆகக்கூடாது. கடமையைக் கடமைக்காகவே செய்ய வேண்டும். கடமையைச் செய்வதற்குத் தான் உனக்கு அதிகாரம். அவை என்ன பயன் தருகிறதோ, தருமோ என்ற பிரச்சினை உன்னை எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது. பயனுக்காகவோ அல்லது பயனை விரும்பியோ, வெறுத்தோ செயலில் ஈடுபடுவது உன்னை கட்டுப்படுத்தும். இந்தப்போர் உன்னுடைய கடமைகளில் ஒன்று. இதை ஆசையோ, நிராசையோ, கோபமோ தாபமோ இல்லாமல், ஆனால் அலட்சியமும் இல்லாமல், நன்றாகவே செய்யவேண்டும்’. ‘உனது செயல்களை யெல்லாம் எனக்கு அர்ப்பணித்து விட்டு என்னில் நிலைத்த மனதுடன், பயனில் பற்றற்று, அகங்காரத்தை விட்டு, மனக் கொதிப்பில்லாமல் போரிடு’ (3 – 30).
கீதை 2வது அத்தியாயம் 39 வது சுலோகத்திலிருந்து 5வது அத்தியாயம் முடியும் வரை இதை கருமயோகம் என்ற ஒரு உயரிய யோக நூலாக விவரிக்கப்படுகிறது.

[தொகு]பக்திப் பார்வை

‘எல்லாம் வல்ல இறைவன் நான். என்னை நம்பு. நீயாகச்செய்வது ஒன்றுமே இல்லை. என்னையன்றி ஓரணுவும் அசையாது.’ 11 வது அத்தியாயத்தில் தன் விசுவ ரூபத்தைக் காட்டிவிட்டு கண்ணன் சொல்கிறான்: ‘இவர்களெல்லாம் என்னால் ஏற்கனவே கொல்லப்பட்டவர்களே. நீ என் கருவி மட்டும் தான்.’ (11–33). ‘உன் செயல்களை யெல்லாம் எனக்காகச் செய். இவ்வுலகிலும் சரி, அவ்வுலகிலும் சரி. நான் உன்னுடன் இருப்பேன்.’ என்று கண்ணன் தன்னை ஆண்டவனாகவே வைத்துப் பேசுவதாக இந்தப் பகுதி உள்ளது.இது எல்லாம் ஈசன் செயல் என்ற பக்தி வாசகத்தை ஆதாரமாகக் கொண்டு எடுத்தாளப்பட்ட வாதம் என்கிற கருத்தும் உண்டு.

[தொகு]தத்துவப் பார்வை

பிரகிருதி என்பது மனிதனின் கூடவே பிறந்த சுபாவம். ‘அகங்காரத்தினால் நீ செய்வதாக நினைத்துக்கொண்டு நான் சொல்வதைக் கேளாமல் செயற்படுவாயானால், அழிந்து போவாய்’ (18–58). ‘அகங்காரத்தின் மயக்கத்தினால் நீ போரிட மாட்டேன் என்று நினைப்பது வெற்றுத் தீர்மானம். அது நடக்காது. உன் பிரகிருதி உன்னை அப்படிச் செய்ய விடாது’ (18 – 59). ‘எந்தக் காரியத்தைச் செய்ய மாட்டேன் என்று நீ பின்வாங்குகிறயோ அதையே செய்யும்படி உன் பிரகிருதி (சுபாவம்) உன்னைக் கட்டாயப்படுத்தும்.’ (18-60). இது பிரகிருதியை ஆதாரமாகக் கொண்டு தத்துவ ரீதியில் சொல்லப்பட்ட ஐந்தாவது வாதம்.

[தொகு]சரணாகதி என்ற முத்தாய்ப்பு

‘உன் சுமையையெல்லாம் என்மேல் இறக்கி வை. தருமம், அதருமம் இரண்டுக்கும் பொறுப்பாளி நீயல்ல என்றறிந்து, என்னையே ஒரே புகலிடமாகக் கொண்டு, உன் கடமையைச் செய்.’ (18-66) என்று கடைசியாகக் கண்ணன் சொல்வதாக உள்ளது.
இவ்வைந்து வாதங்களின் பலத்தால் தான் அர்ச்சுனன் போரிடத் தொடங்குகிறான்.

[தொகு]கீதையின் போதனை

போர் புரியமாட்டேன் என்ற அர்ச்சுனனை மாற்றுவதற்காக எடுத்தாளப்பட்ட ஐந்து வாதங்கள் மனிதர்கள் அனைவருக்கும் கண்ணனால் கூறப்பட்ட போதனைகள் என இந்து சமய நம்பிக்கையுடையவர்களுக்குச் சொல்லப்படுகிறது.
  • பற்றுகளை அறு. அதற்காக புலனடக்கம் என்ற யோகசாதனையைச் செய்துகொண்டே இரு.
  • பலனில் பற்றற்று சுயதருமத்தை ஒழுகு.
  • ஈசனை மறக்காதே. அந்த இரண்டற்ற பரம்பொருளிடம் சுயநலமற்ற பக்தியைச் செலுத்து.
  • அம்மெய்ப் பொருளையே புகலிடமாகக் கொள்.
  • யாரையும் எதையும் வெறுக்காமலிருக்கும் சமநோக்கு அல்லது பிரும்ம உணர்வு என்னும் முடிவை நோக்கிச் செல்.